நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி -ஸ்ருதிஹாசன்

நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி -ஸ்ருதிஹாசன்
ஸ்ருதிஹாசன், சாந்தனு

தனது காதலருடன் இருக்கும் கருப்பு வெள்ளைப் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை ஸ்ருதிஹாசன், தான் ரொம்ப அதிர்ஷ்டசாலி என்று கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தித் திரைப்படங்களில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். இப்போது பிரபாஸ் நடிக்கும் ’சலார்’ என்ற படத்தில் நடிக்கிறார். பிரசாந்த் நீல் இயக்கும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் வெளியாக இருக்கிறது.

நடிகை ஸ்ருதிஹாசன், இங்கிலாந்தைச் சேர்ந்த மைக்கேல் கார்சேல் என்ற நாடகக் கலைஞரை காதலித்து வந்தார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 2019-ம் ஆண்டு பிரிந்தனர். இதையடுத்து ஸ்ருதிஹாசன், சாந்தனு ஹஸாரிகா (Santanu Hazarika) என்பவரை காதலித்து வருகிறார். இவர் டூடுல் கலைஞர். முதலில் காதலை மறுத்த ஸ்ருதி, பிறகு ஒப்புக்கொண்டார்.

ஸ்ருதிஹாசன், சாந்தனு
ஸ்ருதிஹாசன், சாந்தனு

சமீபத்தில் தனது பிறந்தநாளைக் கொண்டாடிய ஸ்ருதிஹாசன், ரசிகர்களுடன் சமூக வலைதளம் மூலம் உரையாட இருப்பதாகக் கூறியிருந்தார். இந்நிலையில் அவர், தனது காதலர் சாந்தனுவுடன் இருக்கும் கருப்பு வெள்ளைப் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ’அவர் அந்த சிறப்புச் சிரிப்பின் மூலம் என்னை சிரிக்க வைக்கிறார்’ என்று குறிப்பிட்டுள்ள ஸ்ருதி, ’நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி’ என்று தெரிவித்துள்ளார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in