`என்னை வைத்து சாந்தனு பயிற்சி எடுக்கிறார்'- வைரலாகும் ஸ்ருதிஹாசனின் புகைப்படம்

`என்னை வைத்து சாந்தனு பயிற்சி எடுக்கிறார்'- வைரலாகும் ஸ்ருதிஹாசனின் புகைப்படம்

நடிகர் ஸ்ருதிஹாசனின் காதலரான சாந்தனு ஹசாரிகா மும்பையை சேர்ந்த பிரபல டூடுல் கலைஞர் ஆவார். தனது காதலனுடன் எடுக்கும் புகைப்படங்களை ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருவார். அண்மையில், சாந்தனு பிறந்தநாளை கொண்டாடிய ஸ்ருதிஹாசன் பல சர்ச்சைகளை சந்தித்தார்.

அதாவது, காதலன் பிறந்தநாள் விழாவில் ஸ்ருதிஹாசன், ஆணுறுப்பு வடிவிலான கேக்கை வெட்டிக் கொண்டாடினார். மேலும் லிப் லாக் புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார். இதனால் பல ரசிகர்கள் இவருக்கு எதிராக பல கமெண்டுகளை தெறிக்க விட்டனர்.

தற்போது, ஸ்ருதிஹாசன் வயிற்றில் அவருடைய காதலன் சாந்தனு பச்சை குத்தியுள்ளார். அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. அதில், தங்க் லைஃப் என பச்சைக் குத்தியுள்ளார். மேலும் என்னை வைத்து சாந்தனும் பயிற்சி எடுத்துக் கொள்கிறார் எனவும் ஸ்ருதிஹாசன் குறிப்பிட்டுள்ளார். இதற்காக ஸ்ருதிஹாசன் மூன்றரை மணி நேரம் செலவழித்தாராம்.

Related Stories

No stories found.