‘அவருடன் பணிபுரிவது சிறப்பான அனுபவம்’: பிரபல ஹீரோவைப் புகழும் ஸ்ருதிஹாசன்!


‘அவருடன் பணிபுரிவது சிறப்பான அனுபவம்’: பிரபல ஹீரோவைப் புகழும் ஸ்ருதிஹாசன்!

"அவருடன் நடிப்பது சிறப்பான அனுபவத்தைக் கொடுக்கிறது" என்று பிரபல ஹீரோவை நடிகை ஸ்ருதிஹாசன் புகழ்ந்துள்ளார்.

கே.ஜி.எஃப் படங்களை இயக்கிய பிரசாந்த் நீல், இயக்கி வரும் படம் ’சலார்’. இதில் பிரபாஸ் ஹீரோ. ஸ்ருதி ஹாசன் ஹீரோயின். ஜெகபதி பாபு, ஈஸ்வரி ராவ் உட்பட பலர் நடிக்கின்றனர். ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இது, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் உருவாகிறது.

இந்தப் படத்தில் பிருத்விராஜ் முக்கியமான வேடத்தில் நடிக்க இருக்கிறார். இதன் ஷூட்டிங் ஹைதராபாத்தில் இப்போது நடந்து வருகிறது. படப்பிடிப்பில் கலந்துள்ள நடிகை ஸ்ருதிஹாசன், நடிகர் பிரபாஸை புகழ்ந்திருக்கிறார்.

அவர் கூறும்போது, ‘’பிரபாஸுடன் பணிபுரிவது சிறப்பான அனுபவமாக இருக்கிறது. அவர் சிறந்த மனிதர். அனைவரிடமும் அன்பாகப் பழகக் கூடியவர். இந்தப் படத்துக்காக, நாங்கள் தொடர்ந்து உழைத்து வருகிறோம். படத்தின் ரிலீஸை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். இதற்கிடையே சிரஞ்சீவியுடனும் நடிக்க இருக்கிறேன். அவர் ஒரு லெஜண்ட். அந்தப் படத்தின் ஷூட்டிங்கை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பாலகிருஷ்ணாவுடனும் நடிக்க இருக்கிறேன். அது எனக்கு ஸ்பெஷல் படம். ஏனென்றால் இந்தப் படத்தின் இயக்குநர் கோபியுடன் நடித்த ’கிராக்’ படம் ரசிகர்களி டையே வரவேற்பைப் பெற்றது. அவருடன் மீண்டும் இணைவதை குடும்பத்துடன் இருப்பது போல உணர்கிறேன்’ என்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in