’சலார்’: ஸ்ருதிஹாசன் லுக் வெளியீடு

ஸ்ருதிஹாசன்
ஸ்ருதிஹாசன்

நடிகை ஸ்ருதிஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருடைய முதல் தோற்றத்தை ’சலார்’ படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகை ஸ்ருதிஹாசனுக்கு இன்று (ஜனவரி 28) 36-வது பிறந்தநாள். இதையொட்டி, சமூகம் மற்றும் சுற்றுப்புறம் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையில், ரசிகர்களுடன் உரையாட இருப்பதாக நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்திருந்தார். மனநலம், திரைப்படம் மற்றும் ஊடகங்களில் பெண்கள், ஃபேஷன் துறையின் நிலைத்தன்மை போன்ற தலைப்புகளில், சமூக வலைதளப் பக்கத்தில் தொடர்ச்சியான நேரலை நிகழ்வுகளை நடத்த இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் அவருக்கு ரசிகர்கள், திரையுலகினர் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அவர் நாயகியாக நடித்துவரும் ’சலார்’ படத்தில் அவருடைய தோற்றத்தைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் அவர் ஆத்யா என்ற கேரக்டரில் நடிக்கிறார்.

’சலார்’ படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்து வருகிறார். ஜெகபதி பாபு, மது குருசாமி, ஈஸ்வரி ராவ் உட்பட பலர் நடிக்கின்றனர். ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இதை ’கே.ஜி.எப்’ இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்குகிறார். ’கே.ஜி.எப்’ படத்தை தயாரித்த ஹோமபிள் பிலிம்ஸ் இதையும் தயாரிக்கிறது. கன்னடத்தில் உருவாகும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in