நடிகை ஸ்ரேயா கணவருக்கு அறுவை சிகிச்சை

நடிகை ஸ்ரேயா கணவருக்கு அறுவை சிகிச்சை

தனது கணவருக்கு அறுவைச் சிகிச்சை நடைபெற்றுள்ளதாக நடிகை ஸ்ரேயா சரண் தெரிவித்துள்ளார்.

தமிழில், ’எனக்கு 20 உனக்கு 18’ படம் மூலம் அறிமுகமானவர் ஸ்ரேயா. தொடர்ந்து, 'மழை', ரஜினிகாந்துடன் 'சிவாஜி', விஜய்யுடன் 'அழகிய தமிழ்மகன்', விக்ரமுடன் 'கந்தசாமி' உட்பட பல படங்களில் நடித்தார். தெலுங்கு, இந்தியிலும் நடித்துள்ள ஸ்ரேயா, 2018 -ம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ஆண்ட்ரீ கோஸ்சீவ் (Andrei Koscheev) என்பவரை காதலித்து, திருமணம் செய்து கொண்டார்.

கணவருடன் ஸ்ரேயா
கணவருடன் ஸ்ரேயா

கரோனா காலகட்டத்தில் பார்சிலோனாவில் வசித்த ஸ்ரேயா, அங்கிருந்து கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார். இவர்களுக்கு ராதா என்ற பெண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில், ஸ்ரேயாவின் கணவருக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நடந்த இந்த அறுவைச் சிகிச்சைக்குப் பின் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ள ஸ்ரேயா, மருத்துவமனை டாக்டர்களுக்கும் நடிகர் ராம் சரணின் மனைவி உபசனாவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in