ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது கிரிக்கெட் வீரர் பயோபிக்!

ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது கிரிக்கெட் வீரர் பயோபிக்!

கிரிக்கெட் வீரர் பிரவீன் தாம்பே வாழ்க்கைக் கதையான ’யார் பிரவீன் தாம்பே?’என்ற படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது.

மும்பையை சேர்ந்தவர் கிரிக்கெட் வீரர் பிரவீன் தாம்பே. ஐபிஎல் தொடரில் தனது 41-வது வயதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக் காக விளையாடிய சுழற் பந்துவீச்சாளர். முதல்தர போட்டிகளில் அதிகம் விளையாடாத இவர், கிரிக்கெட் மீதான காதலால் தொடர்முயற்சி செய்து, ஐபிஎல் தொடரில் ஆடியவர்.

ஸ்ரேயாஸ் தல்படே
ஸ்ரேயாஸ் தல்படே

இவருடைய கிரிக்கெட் வாழ்க்கை சினிமாவாக உருவாகியுள்ளது. ’கெளன் பிரவீன் தாம்பே?’ என்ற பெயரில் இந்தியில் உருவாகி உள்ள இந்தப் படத்தில் தாம்பேவாக ஸ்ரேயாஸ் தல்படே நடித்திருக்கிறார். இதில் ஆஷிஷ் வித்யார்த்தி, பரம்பிரதா சாட்டர்ஜி, அஞ்சலி பாட்டீல் உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படம் தமிழில், ’யார் பிரவீன் தாம்பே?’ என்ற பெயரில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் இப்போது வெளியாகி இருக்கிறது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஏப்ரல் 1-ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in