இந்தியாவுக்கு திரும்பினார் ஸ்ரேயா: அடுத்தடுத்த படவாய்ப்புகளால் நிகழ்ந்த மாற்றம்

இந்தியாவுக்கு திரும்பினார் ஸ்ரேயா: அடுத்தடுத்த படவாய்ப்புகளால் நிகழ்ந்த மாற்றம்
ஸ்ரேயா

அறிமுகமான குறுகிய காலத்திலேயே தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் கணிசமான ரசிகர்களைப் பெற்றவர் ஸ்ரேயா. ரஜினிகாந்த்துடன் இணைந்து ‘சிவாஜி’ திரைப்படத்தில் ஸ்ரேயா நடித்த கதாபாத்திரமும், நகைச்சுவை காட்சிகளும் ஹிட்டடித்தன. 2018-ம் ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த ஆண்ட்ரூ கோர்சேவ் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட ஸ்ரேயா, ஸ்பெயினில் குடியேறினார்.

கணவருடன் ஸ்ரேயா
கணவருடன் ஸ்ரேயா

அங்கிருந்தபடியே அவ்வப்போது இந்தியா வந்து சில படங்களில் நடித்துவந்தார். கரோனா காலகட்டத்தில் முழுக்க முழுக்க ஸ்பெயினில் கழித்த ஸ்ரேயா, தற்போது ராஜமௌலியின் இயக்கத்தில் தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், தெலுங்கில் தயாராகும் ஒரு திரில்லர் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஸ்ரேயா. இதுபோக, சில ஓடிடி சீரிஸ்களிலும் ஸ்ரேயா நடிக்கவுள்ளார். தற்போது பட வாய்ப்புகள் அதிகமாக வருவதால், ஸ்பெயின் நாட்டிலிருந்து குடிபெயர்ந்து, மீண்டும் இந்தியாவுக்கு வந்து மும்பையில் குடியேறியுள்ளார் ஸ்ரேயா.

Related Stories

No stories found.