புது ஜானர் திரைப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்

புது ஜானர் திரைப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்

‘மாறா’, ‘சக்கரா’ திரைப்படங்களுக்குப் பிறகு ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் படம் ‘கலியுகம்’. தமிழ், தெலுங்கில் இத்திரைப்படம் தயாராகிறது. பிரைம் சினிமாஸ் நிறுவனத்தின் ஆர்.கே. இன்டர்நேஷனல் இன்கார்ப்பரேட் சார்பில் ராமகிருஷ்ணன் இத்திரைப்படத்தைத் தயாரிக்கிறார். ப்ரமோத் சுந்தர் இத்திரைப்படத்தை இயக்கிவருகிறார். ஷ்ரத்தா ஸ்ரீநாத்துடன் கிஷோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கே.ராம்சரண் ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றிருக்கிறது. தமிழ் சினிமாவில் முதல் Post Apocalyptic ஜானர் திரைப்படமாக இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

இதுகுறித்து படத்தின் இயக்குநர் ப்ரமோத் சுந்தர் கூறும்போது, “போஸ்ட் அபோகாலிப்டிக் எனப்படும் இறுதிப் பேரழிவுக்குப் பின்னரான திரில்லர் ஜானரில் தயாராகி வரும் படம். திறமையான இளைய தலைமுறை கலைஞர்களால் உருவாக்கப்பட்டு வருகிறது” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in