4 மொழிகளில் வெளியாகும் ஷ்ரத்தாவின் 'விட்னஸ்'

4 மொழிகளில் வெளியாகும் ஷ்ரத்தாவின் 'விட்னஸ்'
StarsUnfolded.co

தூய்மைப் பணியாளர்களின் வாழ்வை பேசும் படமாக உருவாகி இருக்கும் 'விட்னஸ்' நான்கு மொழிகளில் வெளியாக இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

தெலுங்கு மற்றும் கன்னடத் திரைத்துறைகளில் பல படங்களைத் தயாரித்து வெளியிட்ட ‘தி பீப்பிள் மீடியா பேக்டரி’ நிறுவனம் தமிழில் தயாரித்துள்ள படம், ’விட்னஸ்’. அழுத்தமான, உணர்வு பூர்வமான இந்தத் திரைப்படத்தின் வாயிலாக தமிழில் இந்நிறுவனம் காலடி எடுத்து வைக்கிறது. டி.ஜி.விஷ்வபிரசாத் துடன் இணைந்து, விவேக் குச்சிபோட்லா இதை தயாரித்துள்ளார்.

படத்தை இயக்கி, ஒளிப்பதிவு செய்திருப்பவர் தீபக். முத்துவேல் மற்றும் ஜே.பி. சாணக்யா திரைக்கதை எழுதியுள்ளனர். இரமேஷ் தமிழ்மணி இசை அமைத்துள்ளார். இதில், ஷ்ரத்தா ஶ்ரீநாத், ரோகிணி, அழகம்பெருமாள், சண்முகராஜா, ஜி. செல்வா, சுபத்ரா ராபர்ட், இராஜீவ் ஆனந்த் உட்பட பலர் நடித்துள்ளனர்.

தூய்மைப் பணியாளர்களின் உலகத்தை மையமாகக் கொண்டிருக்கும் இந்தப் படத்தின் கதை, பெருநகரங்கள் குறித்து நாம் இதுவரை கண்டிராத உண்மைகளையும், கண்ணுக்குப் புலப்படாத வகையில் அங்கே செயல்படும் அதிகார மையங்களையும் பேசும் என்கிறது படக்குழு. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டது.

தமிழில் உருவாகி இருக்கும் இத்திரைப்படம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.

Related Stories

No stories found.