'ஷாட்.. ஓகே.. நெக்ஸ்ட்': விஷாலை கிண்டலடித்த நடிகர் பிரகாஷ்ராஜ்

'ஷாட்.. ஓகே.. நெக்ஸ்ட்':  விஷாலை கிண்டலடித்த நடிகர் பிரகாஷ்ராஜ்

பிரதமர் மோடியைப் புகழ்ந்து ட்விட் வெளியிட்டிருந்த நடிகர் விஷாலைக் கிண்டல் செய்யும் வகையில் நடிகர் பிரகாஷ்ராஜ் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் விஷால் சமீபத்தில் காசி சென்றிருந்தார். இது தொடர்பாக நேற்று முன்தினம் அவர் ட்விட்டரில், " காசி விஸ்வநாதர் கோயிலைப் புதுப்பித்ததற்காக பிரதமர் மோடியை தலைவணங்குகிறேன். கோயிலை மேம்படுத்தி அற்புதமான இடமாக மாற்றியதற்காக கடவுளின் அருள் எப்போதும் பிரதமருக்கு கிடைக்கும்" என்று புகழ்ந்ததுடன், பதிவை பிரதமர் மோடியையும் டேக் செய்திருந்தார்.

இதற்கு பிரதமர் மோடியும் ரிப்ளை செய்திருந்தார். அதில், "தங்களுக்கு காசியில் சிறப்பான அனுபவம் கிடைத்ததை அறிந்து மகிழ்ந்தேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த உரையாடலை நடிகர் பிரகாஷ்ராஜ் கிண்டலடித்து இன்று ஒரு ட்விட் வெளியட்டுள்ளார். நடிகர் விஷாலின் ட்விட்டர் பதிவைக் குறிப்பிட்டு " ஷாட்.. ஓகே. நெக்ஸ்ட்" என்று குறிப்பிட்டுள்ளார். மோடியும், விஷாலும் சிறப்பாக நடிப்பதாக நடிகர் பிரகாஷ் ராஜ் கிண்டலடித்துள்ள ட்விட்டர் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in