லதா மங்கேஷ்கர் நினைவாக அருங்காட்சியம், இசைப்பள்ளி: சிவராஜ் சிங் சவுகான்

லதா மங்கேஷ்கர் நினைவாக அருங்காட்சியம், இசைப்பள்ளி: சிவராஜ் சிங் சவுகான்

மறைந்த லதா மங்கேஷ்கர் பிறந்த ஊரான இந்தூரில், அவர் நினைவாக அருங்காட்சியகம், இசைப்பள்ளி அமைக்கப்படும் என மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் இசைக்குயில் என்று போற்றப்படும் பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவர் உடல் மும்பையில் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில், மறைந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் நினைவாக, மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் போபாலில் உள்ள ஸ்மார்ட் பார்க்கில் நேற்று மரக்கன்று நட்டு வைத்தார்.

மரக்கன்று நடும் சிவராஜ் சிங் சவுகான்
மரக்கன்று நடும் சிவராஜ் சிங் சவுகான்

பின்னர் அங்கு நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், லதா மங்கேஷ்கர் மத்திய பிரதேசத்தின் மகள். அவர் பிறந்த ஊரான இந்தூரில் அவர் பாடிய அனைத்து பாடல்களும் இடம்பெறும் வகையில் அருங்காட்சியகமும், மியூசிக் அகாடமியும் நிறுவப்படும் என்றார்.

மேலும், லதா மங்கேஷ்கர் பெயரில் இந்தூரில் இசைப் பள்ளி அமைக்கப்படும் என்றும், அவர் பெயரில் விருது வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவருடைய சிலையும் இந்தூரில் நிறுவப்படும் என்றும் சிவராஜ்சிங் சவுகான் கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in