
சிவாங்கி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோ ஒரு மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்து வைராலாகி வருகிறது.
இன்ஸ்டாகிராமின் புதிய ட்ரெண்ட் #1MinMusic ரீல்ஸ் வடிவத்துடன் இசை வீடியோக்களை படைப்பாளிகளும், கலைஞர்களும் இணைந்துள்ளனர். ரீல்ஸ் மற்றும் ஸ்டோரிகளில் பயன்படுத்துவதற்குப் இன்ஸ்டாகிராம் பிரத்தியேகமாக அதன் பிளாட்ஃபார்மில் கிடைக்கும் மியூசிக் டிராக்குகள் மற்றும் வீடியோக்களின் தொகுப்பு 1MinMusic. இதில் இந்தியா முழுவதும் உள்ள 200க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தனது ஒரு நிமிட பாடல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். இன்ஸ்டாகிராம் தமிழுக்காக சில்வர் ட்ரீ (Silver Tree) இணைந்து 25 கலைஞர்களுடன் பணியாற்றுகிறது.
அந்த வரிசையில் பிரபல தமிழ்த் திரைப்பட பின்னணி பாடகர் மற்றும் நடிகை சிவாங்கியினுடைய 'தீவானா' என்ற 1MinMusic சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இயக்குநர் குமரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த பாடலை அனி வீ இசையமைத்துள்ளார். சிவாங்கி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோ ஒரு மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்து வைராலாகி வருகிறது.