`சம்பளம் வாங்கிட்டு இப்படியா பேசறது?’- நடிகரை விளாசும் விஜய் ரசிகர்கள்!

`சம்பளம் வாங்கிட்டு இப்படியா பேசறது?’- நடிகரை விளாசும் விஜய் ரசிகர்கள்!

நடித்ததற்கு சம்பளம் வாங்கிக்கொண்டு படத்தை குறைக் கூறுவதா? என்று விஜய் ரசிகர்கள் மலையாள நடிகரை விளாசியுள்ளனர்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்த படம், பீஸ்ட்’. அனிருத் இசை அமைத்த இந்தப் படம், கடந்த ஏப்ரல் 13-ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இந்தப் படத்தில், பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ தீவிரவாதிகளுள் ஒருவராக நடித்தார். இந்தப் படம் மூலம் அவர் தமிழில் அறிமுகமானார். அவர், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பீஸ்ட் படம் பற்றி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

‘பீஸ்ட்’ படம் உங்களுக்கு தமிழில் சரியான அறிமுகம்தானா? என்று கேட்டதற்கு, ’நல்ல என்ட்ரி இல்லை’ என்று கிண்டலாக பதிலளித்த அவர், விஜய் சூட்கேஸ் போல தூக்கிச் செல்லும் காட்சி குறித்தும் பேசினார். 'பொதுவாக ஒருவர் எடையை தூக்கினால், முகத்தில் அந்த கஷ்டம் தெரியும். ஆனால், விஜய் அப்படி எதையும் முகத்தில் காட்டவில்லை. அதற்கு விஜய் சாரை குறை சொல்லமாட்டேன். படக்குழு தான் காரணம்’ என்றார் ஷைன் டாம் சாக்கோ. அதோடு, ’பீஸ்ட்’ படத்தை தான் இன்னும் பார்க்கவில்லை என்றும் படம் பற்றிய ட்ரோல்களை பார்த்தேன் என்றும் கூறியுள்ளார். அவருடைய இந்தக் கருத்து, விஜய் ரசிகர்களை ஆவேசமாக்கி இருக்கிறது.

`அவருக்கு பிடிக்கவில்லை என்றால், ஏன் நடிக்க சம்மதித்தார்? என்றும், படத்தின் புரமோஷனில் நன்றாக பேசிவிட்டு, இப்போது இப்படி சொல்வது என்ன நியாயம்? என்றும் நடித்ததற்காக சம்பளம் வாங்கிக்கொண்டு படம் பார்க்கவில்லை என்று சொல்வது சரியா? என்று ரசிகர்கள் ஷைன் டாம் சாக்கோவை விளாசியுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in