தொழிலதிபர் புகார்: பிரபல நடிகைகளுக்கு நீதிமன்றம் சம்மன்
ஷமிதா ஷெட்டி, சுனந்தா ஷெட்டி, ஷில்பா ஷெட்டி

தொழிலதிபர் புகார்: பிரபல நடிகைகளுக்கு நீதிமன்றம் சம்மன்

தொழிலதிபர் கொடுத்த புகாரை அடுத்து பிரபல நடிகைகள் மற்றும் அவர் தயாருக்கு நீதிமன்றம் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது.

பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் தமிழில், குஷி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். பிரபுதேவாவுடன் ’மிஸ்டர் ரோமியோ’ என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இவருடைய சகோதரி ஷமிதா ஷெட்டி. இவரும் இந்தி படங்களில் நடித்து வருகிறார். இவருடைய தந்தை சுரேந்தர் ரெட்டி கடந்த 2016 ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டார்.

ஷில்பா ஷெட்டி, சுனந்தா ஷெட்டி, ஷமிதா ஷெட்டி
ஷில்பா ஷெட்டி, சுனந்தா ஷெட்டி, ஷமிதா ஷெட்டி

இந்நிலையில், பர்ஹத் அம்ரா என்ற தொழிலதிபர், தன்னிடம் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க மறுப்பதாக ஷில்பா ஷெட்டி, ஷமிதா ஷெட்டி, அவர்களின் தாயார் சுனந்தா ஷெட்டி ஆகியோர் மீது மும்பை ஜூஹு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அவர் தனது புகாரில், நடிகை ஷில்பா ஷெட்டியின் தந்தை சுரேந்தர் ஷெட்டி, தன்னிடம் ரூ.21 லட்சம் கடனாகப் பெற்று ஷில்பாவும் அவர் தந்தையும் நடத்தும் கார்கிஃப்ட்ஸ் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தார். கடந்த 2015ஆம் ஆண்டு வாங்கிய இந்தப் பணத்தை 2017 ஜனவரியில் திருப்பித் தருவதாக உறுதியளித்திருந்தார். ஆனால், அவர் மறைவுக்குப் பிறகு ஷில்பா ஷெட்டி அவர் சகோதரி மற்றும் தாய் பணத்தைத் திருப்பித் தர மறுத்துவிட்டனர். அதைப் பெற்றுத்தர வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கில் மும்பை அந்தேரி மாஜிஸ்திரே நீதிமன்றம் ஷில்பா, ஷமீதா, அவர்கள் தாய் சுனந்தா ஆகியோர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in