
பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் தமிழில், பிரபுதேவா நடித்த 'மிஸ்டர் ரோமியோ' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். விஜய் நடித்த ‘குஷி’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். இவர் கணவர் ராஜ் குந்த்ரா. இவர்களுக்கு ஷமிஷா என்ற மகள் உள்ளார்.
இந்நிலையில், இந்தி சின்னத்திரை நடிகை ஸ்மிருதி கண்ணாவின் மகளுக்கு சமீபத்தில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இதற்காக மும்பை ஜுஹூவில் உள்ள அவர் வீட்டுக்கு, தன் மகளுடன் வந்தார் ஷில்பா ஷெட்டி. விழாவில் கலந்துகொண்ட பின், தன் வீட்டுக்குத் திரும்பினார். அப்போது அங்கு ரசிகர்கள் கூடி இருந்தனர். அவர்களுக்குக் கைகாட்டிவிட்டு ஷில்பா ஷெட்டி காரில் ஏறினார்.
அப்போது ரசிகர் ஒருவரும் அவர் காருக்குள் ஏற முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை ஷில்பா அவரைத் திட்டினார். அதற்குள் அங்கிருந்த பாதுகாவலர் கார் கதவை அடைத்து அவரை அனுப்பி வைத்தார்.
ஷில்பா ஷெட்டி மகள் ஷமிதாவுடன் புகைப்படம் எடுப்பதற்காக அவ்வாறு செய்ததாக அந்த ரசிகர் கூறியுள்ளார்.