`ஒரே சலிப்பா இருக்கு’: சோசியல் மீடியாவில் இருந்து வெளியேறிய நடிகை ஷில்பா ஷெட்டி!

`ஒரே சலிப்பா இருக்கு’: சோசியல் மீடியாவில் இருந்து வெளியேறிய நடிகை ஷில்பா ஷெட்டி!

சமூக வலைதளத்தில் இருந்து சில காலம் வெளியேறுவதாக பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.

பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் தமிழில், பிரபுதேவாவுடன் ‘மிஸ்டர் ரோமியோ' படத்தில் நடித்துள்ளார். விஜய்யின் ’குஷி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். தொழிலதிபர் ராஜ்குந்த்ராவை திருமணம் செய்து கொண்ட இவர், திருமணத்துக்குப் பிறகு நடிப்பதை விட்டுவிட்டார். டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஷில்பா ஷெட்டி, அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் சில சொந்த விஷயங்களைப் பதிவுகளை வெளியிட்டு வருவார். இதற்காகவே அவரை ஏராளமான பாலோயர்கள் பின் தொடர்கின்றனர். இந்நிலையில் சமூக வலைதளத்தில் இருந்து சிறிது காலம் இடைவெளி எடுத்துக் கொள்ள இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதை, ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ள அவர், ``ஒரே மாதிரியான விஷயங்களால் மிகவும் சலிப்பாக இருக்கிறது. புதிய விஷயத்தைக் கண்டுபிடிக்கும்வரை, சமூக வலைதளத்தில் இருந்து வெளியேறுகிறேன்'' என்று தெரிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.