சரோஜினி நாயுடு பயோபிக்கில் முன்னாள் ஹீரோயின்

சரோஜினி நாயுடு பயோபிக்கில் முன்னாள் ஹீரோயின்
நிஷாந்தி என்ற சாந்திபிரியா

சரோஜினி நாயுடு வாழ்க்கைக் கதை சினிமாவாகிறது. இதில், முன்னாள் ஹீரோயின் நிஷாந்தி நடிக்கிறார்

இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படுபவர் பிரபல சுதந்திர போராட்ட வீராங்கனையும் கவிஞருமான சரோஜினி நாயுடு. இந்திய தேசிய காங்கிரஸில் முதல் பெண் தலைவராகவும் முதல் பெண் ஆளுநராகவும் திகழ்ந்தவர். இவருடைய வாழ்க்கைக் கதை, திரைப்படமாக உருவாகிறது.

சரோஜினி நாயுடு
சரோஜினி நாயுடு

இதில், சரோஜினி நாயுடுவாக, நடிகை பானுபிரியாவின் சகோதரி சாந்திப் பிரியா நடிக்கிறார். இவர், நிஷாந்தி என்ற பெயரில் தமிழில் எங்க ஊரு பாட்டுக்காரன், ஒன்று எங்கள் ஜாதியே, ரயிலுக்கு நேரமாச்சு, பூவிழி ராஜா, சிறையில் பூத்த சின்ன மலர் உட்பட பலப் படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தியிலும் நடித்திருக்கிறார்.

நிஷாந்தி என்ற சாந்திபிரியா
நிஷாந்தி என்ற சாந்திபிரியா

விசிகா பிலிம்ஸ் சார்பில் சரண் சுவர்ணா, ஹனி சவுத்ரி தயாரிக்கும் இந்தப் படம், இந்தி, கன்னடம், தமிழ், தெலுங்கில் உருவாகிறது. வினய் சந்திரா இயக்குகிறார். இதில் சோனல் மொன்டீரோ, ஹிடன் தேஜ்வானி, ஜரினா வஹாப் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இதில் நடிப்பது பற்றி சாந்திபிரியா கூறும்போது, ``இந்த நாட்டி கட்டி எழுப்புவதற்கு பெரும் பங்காற்றிய வலிமையான பெண்ணின் கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது. இதை பெருமையாகவும் கருதுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.