‘இராவண கோட்டம்’ பற்றி போலி வீடியோ: சாந்தனு தகவல்

‘இராவண கோட்டம்’ பற்றி போலி வீடியோ: சாந்தனு  தகவல்

‘இராவண கோட்டம்’ படத்தின் டிரெய்லர் என போலியான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வருவதாகவும், அதைப் புறக்கணிக்குமாறும் நடிகர் சாந்தனு கூறியுள்ளார்.

‘மதயானைக் கூட்டம்’ படத்துக்குப் பிறகு விக்ரம் சுகுமாரன் இயக்கும் படம், ‘இராவண கோட்டம்’. இதில் சாந்தனு, கயல் ஆனந்தி ஜோடியாக நடித்துள்ளனர். பிரபு, இளவரசு, அருள்தாஸ், தீபா உட்பட பலர் நடித்துள்ளனர். வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.

சாந்தனு, கே.பாக்யராஜ், விக்ரம் சுகுமாரன்
சாந்தனு, கே.பாக்யராஜ், விக்ரம் சுகுமாரன்

கரோனா காரணமாக இதன் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ராமநாதபுர மாவட்ட மக்களின் வாழ்க்கையைச் சொல்லும் படமாக இது உருவாகி இருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் என்று போலியான வீடியோ ஒன்று உலா வருவதாக நடிகர் சாந்தனு பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி ட்விட்டரில் அவர், “நான் நடித்துள்ள ’இராவண கோட்டம்’ படத்தின் டிரெய்லர் என சமூக வலைதளங்களில் போலியான வீடியோ பரவி வருகிறது. தயவுசெய்து அதைப் புறக்கணிக்கவும். அதிகாரபூர்வ டிரெய்லர் மற்றும் படம் பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்’’ என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in