இரண்டு மாதங்களுக்கு நிறுத்தப்படும் ஷங்கரின் தெலுங்குப் பட ஷூட்டிங்: என்ன பிரச்சினை?

இரண்டு மாதங்களுக்கு நிறுத்தப்படும் ஷங்கரின் தெலுங்குப் பட ஷூட்டிங்: என்ன பிரச்சினை?

தமிழின் முக்கியமான இயக்குநரான ஷங்கர் இயக்கிவரும் தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பில் சில சலசலப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இந்தச் சூழலில் படப்பிடிப்பு இரண்டு மாதங்களுக்கு நிறுத்தப்படவிருக்கிறது.

ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, ஜெயராம், சுனில் உட்பட பலர் நடிக்கும் தெலுங்குப் படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். தில் ராஜு தயாரிப்பில் உருவாகிவரும் இப்படம் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ஆர்ட் டைரக்டர்களாக மோனிகா, ராமகிருஷ்ணா ஆகியோர் பணியாற்றிவந்தனர். படத்துக்காக, பல்கலைக்கழகம் ஒன்றின் செட் போட வேண்டியிருந்த நிலையில், செட் அமைப்பது தொடர்பாக ஷங்கருக்கும் ஆர்ட் டைரக்டர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்தப் படத்திலிருந்து மோனிகாவும் ராமகிருஷ்ணாவும் விலகிவிட்டனர்.

இதேபோல் படத்தின் பட்ஜெட் விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் தில் ராஜுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் புரொடக்‌ஷன் டிசைனர் ரவீந்தர் ரெட்டியும் இப்படத்திலிருந்து வெளியேறிவிட்டார்.

இதற்கிடையே இப்படத்தின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டிருக்கிறது. தற்போது கமல் நடிப்பில் ‘இந்தியன் 2’ படத்தை மீண்டும் தொடங்குவதற்காக ஷங்கர் சென்னை வந்துள்ளார். இதனால் இரண்டு மாதங்களுக்கு ராம் சரண் படத்துக்கான படப்பிடிப்பு நிறுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in