'கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க’: ஷங்கர், விஜய் பட தயாரிப்பாளர் திடீர் அறிக்கைக்கு காரணம் என்ன?

'கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க’: ஷங்கர், விஜய் பட தயாரிப்பாளர் திடீர் அறிக்கைக்கு காரணம் என்ன?

இயக்குநர் ஷங்கர், விஜய் படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர், ராம் சரண் நாயகனாக நடிக்கும் படத்தை இப்போது இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு தற்காலிகமாக, RC15 என டைட்டில் வைத்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் கியாரா அத்வானி நாயகியாக நடிக்கிறார். அஞ்சலி, ஜெயராம், சுனில், ஸ்ரீகாந்த், நவீன் சந்திரா உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார்.

பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தனது ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மூலம் பிரம்மாண்டமாக இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இது அந்த நிறுவனத்துக்கு இது ஐம்பதாவது படம் என்பதால், அதிக பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாகிறது. இவர்தான் விஜய் நடிக்கும் 'வாரிசு' படத்தையும் தயாரித்து வருகிறார்.

இந்நிலையில், இந்தப் படத்தில் நடிக்க, புதுமுக நடிகர், நடிகைகளுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதாக கடந்த சில நாட்களாக, சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. இந்நிலையில் ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் இந்த செய்தியை மறுத்துள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’எங்கள் நிறுவனம் தயாரித்து வரும் ’ஆர்சி 15’, ’எஸ்விசி 50’ படத்திற்கு நாங்கள் அறிமுக நடிகர்களைத் தேர்வு செய்யவில்லை. இது தொடர்பாக எந்த ஏஜென்சியையோ, தனிநபரையும் நாங்கள் நியமிக்கவில்லை. இதுகுறித்து வெளியாகி வரும் செய்திகள் பொய்யானது. அனைவரும் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in