பாடகியாக அறிமுகமாகிறார் இயக்குநர் ஷங்கர் மகள்!

அதிதி ஷங்கர்
அதிதி ஷங்கர்

இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி, தெலுங்கில் பாடகியாக அறிமுகமாகிறார்.

இயக்குநர் ஷங்கரின் 2-வது மகள் அதிதி, டாக்டருக்கு படித்திருக்கிறார். அவர் கார்த்தி ஜோடியாக இப்போது ’விருமன்’ படத்தில் நடித்திருக்கிறார். சூர்யாவின் தயாரிப்பில், முத்தையா இயக்கும் இந்தப் படம் மூலம் அவர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். கிராமத்துப் பெண்ணாக இந்தப் படத்தில் அவர் நடித்துள்ளார்.

அதிதி ஷங்கர்
அதிதி ஷங்கர்

இதையடுத்து மேலும் சில படங்களில் அவர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, அவர் தெலுங்கு சினிமாவில் பாடகியாக அறிமுகமாகிறார். முறைப்படி சங்கீதம் கற்றுள்ள அவரை, இசை அமைப்பாளர் தமன், ’கானி’ (Ghani) என்ற தெலுங்கு படத்தில் பாடகியாக அறிமுகம் செய்கிறார்.

அதிதி ஷங்கர்
அதிதி ஷங்கர்

இந்தப் படத்தில் வருண் தேஜ் நாயகனாக நடிக்கிறார். சாயி மஞ்சரேக்கர், உபேந்திரா, ஜெகபதி பாபு, சுனில் ஷெட்டி, நவீன் சந்திரா, நதியா உட்பட பலர் நடித்துள்ளனர். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தை கிரண் கோரபதி இயக்குகிறார்.

இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ’ரோமியோ ஜூலியட்’ என்ற பாடலை அதிதி ஷங்கர் பாடியுள்ளார். படத்தின் ஹலைட்டான பாடல்களில் ஒன்றான இது, வரும் 8-ம் தேதி விஜயவாடாவில் உள்ள கேஎல் பல்கலைக்கழகத்தில் வெளியிடப்படுகிறது. விழாவில் அதிதி அந்தப் பாடலை பாட இருப்பதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in