‘ஆர்.சி.15’ படப்பிடிப்பைத் தொடங்கினார் ஷங்கர்!

ஷங்கர்
ஷங்கர்ராம்சரண் படப்பிடிப்பைத் தொடங்கிய ஷங்கர்!

இயக்குநர் ஷங்கர் ராம்சரண் படத்துக்கான அடுத்தக்கட்ட படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார்.

இயக்குநர் ஷங்கர் தற்போது கமல்ஹாசனின் ‘இந்தியன்2’ மற்றும் ராம்சரணின் ‘ஆர்.சி.15’ ஆகிய படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் இணையாக சென்று கொண்டிருந்த நிலையில், தற்போது ‘ஆர்.சி.15’ படத்தின் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி இருப்பதாக அங்கிருந்து இயக்குநர் ஷங்கர் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

‘இந்தியன்2’ படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் தருணத்தில் இருப்பதால் ‘ஆர்.சி.15’ அடுத்தக்கட்டப் படப்பிடிப்பைத் தொடங்கி இருக்கிறார் ஷங்கர். இதில் ராம்சரண் ஜோடியாக கீரா அத்வானி நடிக்கிறார். தற்போது அவருக்குத் திருமணம் ஆகி இருப்பதால், இந்த ஹைதராபாத் ஷெட்யூல் படப்பிடிப்பு அவர் இல்லாமல்தான் நடக்கும் என்கிறது படக்குழு. தில்ராஜூ மற்றும் சிரீஸ் இந்தப் படத்தைத் தயாரிக்க தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் படம் வெளியாக இருக்கிறது. தமன் இசையமைக்க, எஸ்.ஜே.சூர்யா, சுனில், ஸ்ரீகாந்த் உள்ளிட்டப் பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in