`இதுதான் ஆன்மாவை அமைதிப்படுத்தும்'- குழந்தைகளுடன் புகைப்படம் பகிர்ந்து ஷாலினி அஜித்குமார் நெகிழ்ச்சி!

ஷாலினி அஜித்குமார்
ஷாலினி அஜித்குமார்`இதுதான் ஆன்மாவை அமைதிப்படுத்தும்'- குழந்தைகளுடன் புகைப்படம் பகிர்ந்து ஷாலினி அஜித்குமார் நெகிழ்ச்சி!

ஷாலினி அஜித்குமார் தன் குழந்தைகளுடன் எடுத்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து நெகிழ்ச்சியான விஷயத்தைப் பகிர்ந்துள்ளார்.

’துணிவு’ படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு நடிகர் அஜித்குமார் தனது குடும்பத்துடன் யூரோப்பா சென்றார். அங்கு தன் குழந்தைகளுடன் எடுத்தப் புகைப்படத்தை நடிகை ஷாலினி அஜித்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து அவர், ‘குழந்தைகளுடன் இருப்பது ஒன்று மட்டுமே ஆன்மாவை அமைதிப்படுத்தும் ஒரு விஷயம்’ என நெகிழ்ச்சியாகத் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாகவே, ஷாலினி அஜித்குமார் யூரோப்பாவில் எடுத்து வந்த புகைப்படங்களைப் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

‘வலிமை’, ‘துணிவு’ ஆகிய படங்களின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோதே, இந்தியா முழுவதும் பைக்கில் பயணமானார் நடிகர் அஜித். இப்போது ‘துணிவு’ படத்திற்குப் பிறகு, ‘ஏகே 62’ மகிழ்திருமேனி இயக்கத்தில் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், இந்தப் படம் முடித்துவிட்டு, உலக அளவில் பைக் டூர் தொடங்க இருக்கிறார் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in