இணையத்தை கலக்கும் ஷாலினி அஜித்!

குடும்பத்தினருடன் அஜித்
குடும்பத்தினருடன் அஜித்

அஜித் குமாரின் குடும்ப புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்ததில், இணையவெளியில் வைரல் அலைக்கு ஆளாகி இருக்கிறார் ஷாலினி அஜித்.

’நடிகர் அஜித் குமார் பப்ளிசிடியை விரும்புவதில்லை’ என்பது அஜித்துக்கான பப்ளிசிடி உத்திகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. தான் நடித்தது உட்பட திரைவிழாக்கள் எதிலும் பங்கேற்பதில்லை என்பதுடன், சமூக ஊடகங்களிலும் அஜித் குமார் இல்லை. அதிகாரபூர்வமான தனது அறிவிப்புகளையும் பிஆர்ஓ மூலமாகவே வெளியுலகுக்கு அறியச் செய்வது அஜித் வழக்கம்.

சமூக ஊடகங்களில் இல்லை; பப்ளிசிடியை விரும்புவதில்லை.. என்றபோதும் எப்படியோ அஜித்தின் நகர்வுகள் அனைத்தும் உடனுக்குடன் வெளியாகி இணையவெளியில் பரபரப்பை ஏற்படுத்தும். இந்த வகையில் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான அஜித்தின் வாகன உலாக்கள் உடனுக்குடன் இணையத்தில் வெளியாகி அண்மையில் ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்தன.

அஜித் - ஷாலினி
அஜித் - ஷாலினி

ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கும் எதிர்பார்ப்பை ஈடுசெய்யும் வகையிலும், அஜித் சமூக ஊடகங்களில் அதிகாரபூர்வமாக இல்லாததை நிவர்த்தி செய்யும் வகையிலும் 2 மாதங்களுக்கு முன்னர், ஷாலினி அஜித் அதிகாரபூர்வமாக இன்ஸ்டாகிராமில் அடியெடுத்தார். இதுவரை 3 பதிவுகள் மட்டுமே இட்டிருக்கும் ஷாலினி, புத்தாண்டினை முன்னிட்டு வெளியிட்ட இன்ஸ்டா படங்கள் இணையவெளியில் வைரலாகி இருக்கின்றன.

வெளிநாடுகளில் வலம் வரும் அஜித் குடும்பம், அங்கிருந்தபடியே புத்தாண்டு கொண்டாட்டத்தை மேற்கொண்ட புகைப்படங்கள் அவை. ஷாலினியின் அதிகாரபூர்வ கணக்கு என்பதால், இந்த இன்ஸ்டா படங்களை இதர சமூக ஊடகங்களிலும் அஜித் ரசிகர்கள் பகிர்ந்து, மகிழ்ந்து வருகின்றனர்.

பொங்கலுக்கு அஜித்தின் ’துணிவு’ திரைப்படம் வெளியாக இருப்பதை முன்னிட்டு அதன் ட்ரெய்லர் டிச.31 மாலை வெளியானது. அதன் பரபரப்பு அடங்குவதற்குள் ஷாலினி அஜித் படங்கள் இணையவெளியை கலக்கி வருகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in