பிக் பாஸ் வீட்டில் சிகரெட்டை ஊதித்தள்ளும் ஷகிலா; சர்ச்சையாகும் வீடியோ!

நடிகை ஷகிலா...
நடிகை ஷகிலா...

பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியில் நடிகை ஷகிலா சிகரெட் பிடித்துத் தள்ளும் காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் தமிழின் ஏழாவது சீசன் அடுத்த மாதம் ஆரம்பிக்க இருக்கும் நிலையில், தெலுங்கில் இதன் ஏழாவது சீசன் தற்போது தொடங்கியுள்ளது. இதில் முதல் வாரத்திலேயே நடிகை கிரண் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். அவர் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் எதிர்பார்க்கப்பட்ட ஷகிலா, தமிழுக்கு வராமல் தெலுங்கு பிக் பாஸில் கலந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தற்போது நடிகை ஷகிலா பிக் பாஸ் வீட்டுக்குள் அமர்ந்து சிகரெட்டை ஊதித் தள்ளும் வீடியோ ஒன்று வைரலாகி இருக்கிறது. இதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியிருக்கின்றனர். தமிழில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24*7 என ஒளிபரப்பான போதும் அன்கட் வெர்ஷனில் நடிகை அபிராமி சிகரெட் பிடிக்கும் காட்சி அப்போது வெளியாகி சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in