பிரம்மாண்ட எதிர்பார்ப்பில் `கே.ஜி.எப் 2’: பின் வாங்கியது பிரபல ஹீரோ படம்!

பிரம்மாண்ட எதிர்பார்ப்பில் `கே.ஜி.எப் 2’: பின் வாங்கியது பிரபல ஹீரோ படம்!

’கே.ஜி.எப் சாப்டர் 2’ படத்துக்கு வட இந்தியாவிலும் அதிக எதிர்பார்ப்பு இருப்பதால், அந்த படத்துடன் ரிலீஸ் ஆவதாக இருந்த பிரபல ஹீரோவின் படம் தள்ளிப் போயிருக்கிறது.

விஜய் நடித்துள்ள ’பீஸ்ட்’ வரும் 13-ம் தேதி வெளியாகிறது. யாஷ், சஞ்சய் தத் நடித்துள்ள ’கே.ஜி.எப் சாப்டர் 2’ படம் 14-ம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கிடையே, பிரபல இந்தி நடிகர் ஷாகித் கபூரின் ’ஜெர்ஸி’ படமும் 14-ம் தேதி ரிலீஸ் ஆக இருந்தது. இது தெலுங்கில் நானி நடித்து ஹிட்டான ஜெர்ஸி படத்தின் ரீமேக்.

பீஸ்ட் -விஜய், ஜெர்ஸி ஷாகித் கபூர், கே.ஜி.எப் 2- யாஷ்
பீஸ்ட் -விஜய், ஜெர்ஸி ஷாகித் கபூர், கே.ஜி.எப் 2- யாஷ்

ஒரே நேரத்தில் மூன்று படங்கள் ரிலீஸ் ஆவதால் பாக்ஸ் ஆபிஸில் கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதுபற்றி நடிகர் ஷாகித் கபூர் கூறும்போது, ``நான் விஜய்யின் ரசிகன். அவர் படங்கள் எனக்குப் பிடிக்கும். அவர் நடித்துள்ள பீஸ்ட் அற்புதமான படமாக இருக்கும். இருந்தாலும் அந்தப் படத்தை ஜெர்ஸி படத்துக்கு போட்டியாக நினைக்கவில்லை'' என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், கே.ஜி.எப் சாப்டர் 2 படத்துக்கு வட இந்தியாவிலும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இதனால், ஜெர்ஸி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு, வரும் 22-ம் தேதிக்கு மாற்றி வைத்துள்ளது. இந்தப் படம் டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆக வேண்டியிருந்தது. கரோனா காரணமாக ரிலீஸ் தள்ளிப் போனது. இந்நிலையில் இதன் ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போயிருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in