போதைப்பொருள் வழக்கில் ஷாருக்கான் மகனுக்குத் தொடர்பில்லை: குற்றப்பத்திரிகையில் புதுத்தகவல்!

போதைப்பொருள் வழக்கில் ஷாருக்கான் மகனுக்குத் தொடர்பில்லை: குற்றப்பத்திரிகையில் புதுத்தகவல்!

போதைப்பொருள் வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை. அவர் அப்பாவி என போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து கோவா சென்ற சுற்றுலா கப்பலில், பாலிவுட் பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் மற்றும் அவரது நண்பர்களுடன் போதைப் பொருட்கள் பயன்படுத்தியதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மூன்று வாரங்களுக்கு மேல் சிறையில் இருந்த ஆர்யன்கான் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் 6 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகையை போதைப்பொருள் தடுப்பு போலீஸார் இன்று தாக்கல் செய்தனர். அதில், ஆர்யன்கான் அப்பாவி எனக் கூறப்பட்டிருந்தது.

இது தொடர்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறை அதிகாரி சஞ்சய் குமார் சிங் கூறுகையில், “ ஆர்யன்கான் மற்றும் மொகக் என்பவர் தவிர மற்றவர்கள் அனைவரும் போதைப்பொருள் வைத்திருந்தனர். ஆர்யன்கானுக்கு எதிராக போதிய ஆதாரங்களைத் திரட்ட முடியவில்லை” என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in