கைவிடப்பட்டதா ஷாருக்கானின் `லயன்' படம்?

இயக்குநர் அட்லியின் பதிவால் ரசிகர்கள் கேள்வி
கைவிடப்பட்டதா ஷாருக்கானின் `லயன்' படம்?

இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான்- நயன்தாரா நடிப்பில் உருவாகி வந்த லயன் திரைப்படம் கைவிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

`ராஜா ராணி' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லி. அதன்பின்னர் விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கினார் அட்லி. இந்த படங்கள் வெற்றி பெற்றிருந்தாலும் அட்லியை சுற்றி சர்ச்சைகளும் இருந்து வந்தது. அதிக செலவு வைக்கிறார், எடுக்கிற காட்சிகளில் முழுவதையும் பயன்படுத்துவதில்லை, பழைய படங்களை காப்பியடிக்கிறார் என அட்லி மீது நிறைய புகார்கள் கூறப்பட்டாலும், கோலிவுட்டில் டாப் 10 இயக்குநர்களில் இடம் பிடித்துள்ளார்.

பிகில் படத்திற்கு பிறகு ஷாருக்கானை வைத்து அட்லி `லயன்' என்ற படம் இயக்குவதாக கூறப்பட்டது. தொடர் தோல்விகளில் இருந்த ஷாருக்கான் அட்லியை இயக்குநராக தேர்வு செய்ததை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இவர்கள் இணையும் படத்தின் படப்பிடிப்பு புனேயில் தொடங்கியது. நயன்தாரா, ப்ரியாமணி ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஆனால் முதல் ஷெட்யூல்டுடன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

ஷாருக்கானின் மகன் போதை மருந்து உபயோகித்த வழக்கில் கைது செய்யப்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், ஷாருக்கான் தற்போது அடுத்த படத்திற்கான பணிகளை தொடங்கிவிட்டதாகவும், அட்லி படத்தை அவர் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. அதனால், ஷாருக்கான் திரைப்படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இயக்குநர் அட்லி தனது இன்ஸ்ராகிராமில், குத்துச் சண்டை வீரர் மைக் டைசனின் புகைப்படத்தை பதிவிட்டு, அதன் கீழ் கேப்ஷனாக, "உங்களைத் தவறாக வழிநடத்தியவர்கள், அதற்காக வருத்தப்படும் காலம் ஒன்று வரும்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு ஷாருக்கானை குறிப்பிட்டுள்ளாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Related Stories

No stories found.