`இது தாக்கத்தை ஏற்படுத்தும்'- உலகத் தரத்தில் கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டும் பிரபல ஹீரோ!

`இது தாக்கத்தை ஏற்படுத்தும்'- உலகத் தரத்தில் கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டும் பிரபல ஹீரோ!

உலகத் தரத்திலான பிரம்மாண்ட கிரிக்கெட் ஸ்டேடியத்தைக் கட்ட இருப்பதாக பிரபல ஹீரோ தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் ஹீரோ ஷாருக் கான். இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் என்ற ஐபிஎல் கிரிக்கெட் அணியை வைத்துள்ளார். இந்த அணி, இரண்டு முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், இவர் அமெரிக்காவைச் சேர்ந்த மேஜர் லீக் கிரிக்கெட் அமைப்புடன் இணைந்துள்ளார். அந்த அமைப்புடன் சேர்ந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரம்மாண்டமான கிரிக்கெட் ஸ்டேடியத்தை உருவாக்க உள்ளனர். மில்லியன் டாலர் செலவில், 15 ஏக்கர் பரப்பளவில் இந்த ஸ்டேடியம் உருவாக இருக்கிறது.

இதுபற்றி ஷாருக் கான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``மேஜர் லீக் கிரிக்கெட்டில் (எம்.எல்.சி) எங்களின் முதலீடு, அமெரிக்க கிரிக்கெட்டின் அற்புதமான எதிர்காலம் குறித்த நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்திருக்கிறது. அதோடு டி-20 கிரிக்கெட்டில் நைட் ரைடர்ஸை, உலகளாவிய பிராண்டாக நிலைநிறுத்தும் நோக்கமும் இருக்கிறது. எம்.எல்.சியுடன் இணைந்து லாஸ் ஏஞ்சல்ஸில் உலகத்தரமான கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கும் திட்டம் எங்களுக்கும் அவர்களுக்கும் உற்சாகத்தைத் தருகிறது. இது உலகின் பெருநகரங்களில் ஒரு மாற்றத்துக்கான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.