’கிங் இஸ் பேக்’- 4 மாதத்துக்குப் பின் இன்ஸ்டாவுக்கு திரும்பினார் ஷாருக்

ஒரு மணி நேரத்தில் 6 லட்சம் பேர் பார்த்த பதிவு
ஷாருக்கான்
ஷாருக்கான்

நடிகர் ஷாருக்கான், நான்கு மாதத்துக்குப் பிறகு இன்ஸ்டாகிராமுக்கு திரும்பி இருக்கிறார்.

போதைப் பொருள் வழக்கில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தால் மிகுந்த கவலை அடைந்த நடிகர் ஷாருக்கான், அட்லீ இயக்கத்தில் நடித்துக் கொண்டிருந்த படப்பிடிப்பை அப்படியே நிறுத்தினார்.

எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், இந்த சம்பவத்தை அடுத்து அதில் எதையும் பதிவிடாமலும் இருந்து வந்தார். கடைசியாக செப்டம்பர் 19 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். அதன் பிறகு அவர் எதையும் பதிவிடவில்லை. இந்நிலையில் நான்கு மாதங்களுக்குப் பிறகு இன்ஸ்டாகிராமுக்கு மீண்டும் திரும்பி இருக்கிறார்.

ஷாருக்கான்
ஷாருக்கான்

தானும் தன் மனைவி கவுரியும் இணைந்து நடித்துள்ள டி.வி விளம்பரத்தை அதில் பதிவு செய்துள்ளார் ஷாருக்கான். பதிவிட்ட ஒரு மணி நேரத்துக்குள்ளேயே அதை 6 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்

‘த கிங் இஸ் பேக்’, ’நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் பதிவை பார்ப்பதில் மகிழ்ச்சி’ என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in