
ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘பதான்’ திரைப்படம் இன்று ரிலீஸுக்கு முன்பே தமிழ் ராக்கர்ஸ், ஃபிலிம்மீ 4 வாப், ஃபிலிம்ஜில்லா, எம்பி4 மூவிஸ், பகல்வேர்ல்ட், வேகமூவிஸ் என பல இணையதளங்களில் லீக் ஆகியுள்ள தகவல் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
ஷாருக்கான், தீபிகா படுகோனே நடிப்பில், சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான 'பதான்' படத்தின் எச்டி பிரிண்ட் ஆன்லைனில் கிடைக்கிறது என்று பலரும் சமூக வலைத்தளங்களில் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த செய்தியால் திரைப்பட தயாரிப்பாளர் கவலையடைந்து இருக்கிறார். இந்தப்படத்துக்கு சிலர் ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்தாலும் கூட சிக்கலின்றி படம் ரிலீசானது. எனவே தமிழ் ராக்கர்ஸ், ஃபிலிம்மீ 4 வாப், ஃபிலிம்ஜில்லா, எம்பி4 மூவிஸ், பகல்வேர்ல்ட், வேகமூவிஸ் உள்ளிட்ட இணையதளங்களில் யாரும் படத்தை பார்க்க வேண்டாம் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
'பதான்' திரைப்படம் முன்பதிவில் மட்டும் 70 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக வெளியான தகவல் படக்குழு மற்றும் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஷாருக்கானின் நடிப்பில் 4 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியாகும் இந்தப் படம் 100 நாடுகளில் 2500 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.