பங்களா முன் குவிந்த ரசிகர்கள்: 2 வருடத்துக்குப் பின் கெத்தாக வாழ்த்திய பாலிவுட் பாட்ஷா!

பங்களா முன் குவிந்த ரசிகர்கள்: 2 வருடத்துக்குப் பின் கெத்தாக வாழ்த்திய பாலிவுட் பாட்ஷா!

ரம்ஜானை முன்னிட்டு தனது பங்களா முன் குவிந்த ரசிகர்களுக்கு ’பாலிவுட் பாட்ஷா’ ஷாருக்கான் வாழ்த்துக் கூறிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரம்ஜான் நாடு முழுவதும் இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து மும்பையில் உள்ள பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானின் பங்களாவின் முன் அவருக்கு வாழ்த்து சொல்ல, ஏராளமான ரசிகர்கள் கூடினர். வழக்கமாக ரம்ஜான் பண்டிகைக்கு அவர் தனது பங்களா முன் கூடியிருக்கும் ரசிகர்களுக்கு வாழ்த்து சொல்வது வழக்கம்.

கரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக அவர் பங்களாவுக்கு வெளியே ரசிகர்களை சந்திக்கவில்லை. இந்நிலையில் 2 வருடங்களுக்கு பிறகு இன்று தனது பங்களாவின் பால்கனிக்கு வந்த அவர், ரசிகர்களின் வாழ்த்தை ஏற்றுக்கொண்டார். ஷாருக்கானைக் கண்டதும் ரசிகர்கள் விசிலடித்தும் கத்தியும் கூச்சலிட்டனர்.

பின்னர் கைகளை ஆட்டியும் பிளையிங் கிஸ் கொடுத்தும் ரசிகர்களை மகிழ்வித்தார் ஷாருக்கான். பின்னர் தனது பால்கனியில் இருந்தவாறே ரசிகர்களுடன் செல்ஃபியும் எடுத்தார். அந்தப் புகைப்படங்களைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் ஷாருக்கான், ரம்ஜான் நாளில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. அல்லா உங்களை மகிழ்ச்சியுடன் ஆசிர்வதிப்பாராக என்று கூறியுள்ளார்.

ஷாருக்கான் டீம், அவர் ரசிகர்களுக்கு வாழ்த்துக் கூறும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவும் புகைப் படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Related Stories

No stories found.