'என்னை அப்படியே ஷாருக்குன்னு நம்பிட்டாங்க’ : டூப்ளிகேட்டின் திடுக் அனுபவம்!

'என்னை அப்படியே ஷாருக்குன்னு நம்பிட்டாங்க’ : டூப்ளிகேட்டின் திடுக் அனுபவம்!

அசப்பில் அப்படியே பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் போல் இருக்கிறார் இப்ராஹிம் கத்ரி. ஹேர்ஸ்டைல், அந்த முகம், சிரிப்பு எல்லாமே அப்படியேதான் இருக்கிறது. அவர் இன்ஸ்டாவில் இருக்கும் புகைப்படங்களைப் பார்த்து, ஷாருக் கான் என நினைத்தே ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பின் தொடர்கிறார்கள்.

எங்காவது கூட்டமான இடத்துக்குச் சென்றால் ரசிகர்கள் ஒரு செல்ஃபி எடுத்துகிறோம் என்று கூடி விடுகிறார்கள். ஒரு முறை இப்படி ரசிகர்களிடம் சிக்கிக் கொண்டு வெளிவர முடியாமல், போலீஸ்காரர்கள் புண்ணியத்தில் மீண்டிருக்கிறார் இப்ராஹிம். இவருக்கு இப்படியொரு பிரச்சினை. இருந்தாலும் ரசிகர்கள் தன்னை ஷாருக் கான் என நினைப்பதை ரசிக்கிறேன் என்கிறார் இப்ராஹிம்.

‘’ தோற்றதுக்காக அதிகம் மெனக்கெடுபவன் அல்ல நான். ஆனால், என் தோற்றத்தை என் நண்பர்களும், குடும்பத்தினரும் ’நீ ஷாருக் மாதிரி இருக்கே’ என்று கூறியே கவனத்துக்கு கொண்டு வந்தனர். இந்தியாவின் சூப்பர் ஸ்டார் போன்ற தோற்றத்தில் இருப்பதில் என் பெற்றோருக்கு பெருமை. வளர்ந்த பிறகுதான் நான் ஷாருக் கான் போன்றே தோன்றினேன். பிறகுதான் பிரச்சினைகள் ஆரம்பமானது.

என் நண்பர்களுடன் ஷாருக் கான் நடித்த ’ரயீஸ்’ என்ற படத்தை தியேட்டரில் பார்த்துக் கொண்டிருந்தபோது, ரசிகர்கள் என்னைச் சுற்றி வளைத்துக் கொண்டனர். நிஜ ஷாருக் கான்,ரசிகர்களுடன் படம் பார்க்க வந்திருப்பதாக நினைத்து , செல்ஃபி எடுக்க முண்டியடித்தனர்.

இப்ராஹிம்
இப்ராஹிம்

ஒரு முறை ஐபிஎல்லில்,கொல்கத்தா- குஜராத் அணி மோதும் ஆட்டத்தைப் பார்க்கச் சென்றேன். மொத்த கேமராவும் என்னை நோக்கித் திரும்பிவிட்டது. ரசிகர்கள், ஷாருக்கான் பட பாடலையும் வசனங்களையும் கைதட்டி பேசியபடி என்னைக் கவனிக்கத் தொடங்கினர். ஷாருக் மீது மக்கள் வைத்திருக்கும் அன்பைத் தெரிந்து கொண்டேன். அப்போது என்னை பாலிவுட் பாட்ஷாவாக உணர்ந்தேன். சிலர் திடீரென என்னை இறுக்கிப் பிடித்துக் கொண்டனர்.

என் சட்டைக் கிழிந்தது. அவர்களிடம் இருந்து தப்பிக்க போலீஸை அழைக்க வேண்டி வந்தது. அவர்கள் என்னை பத்திரமாக மீட்டபின், ஒரு போலீஸ்காரர் கேட்டார், ’ஷாருக் சார் ஒரே ஒரு செல்ஃபி என்று’’ எனக் கூறிவிட்டு சிரிக்கிறார்.

ஹீரோவாக இருப்பது கஷ்டம். ஹீரோ மாதிரி இருப்பதுதான் கஷ்டம்தான் என்கிறார் இப்ராஹிம் கத்ரி.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in