நடிகை ஷபானா ஆஸ்மிக்கு கரோனா

நடிகை ஷபானா ஆஸ்மி
நடிகை ஷபானா ஆஸ்மி

பிரபல நடிகை ஷபானா ஆஸ்மி, தனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்றின் 3-வது அலை வேகமாக பரவி வருகிறது. அதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 34 ஆயிரத்து 281 ஆக உள்ளது. இந்த தொற்று காரணமாக, சமீபகாலமாக பல பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

சமீபத்தில் இயக்குநர் பாரதிராஜா கரோனா தொற்றில் இருந்து மீண்டார். நடிகர் துல்கர் சல்மான், மம்மூட்டி, நடிகை கஜோல் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து தங்களை தனிமைப்படுத்தி உள்ளனர்.

ஷபானா ஆஸ்மி
ஷபானா ஆஸ்மி

இந்நிலையில், பிரபல இந்தி நடிகை ஷபானா ஆஸ்மிக்கும் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பிரபல கவிஞரும் இந்திப் பாடலாசிரியருமான ஜாவேத் அக்தர் மனைவியான நடிகை ஷபானா, தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், அவர் கரோனா தொற்று காரணமாக, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டேன். என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் அவர் விரைவில் நலம்பெற வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in