மிதாலி ராஜ் வாழ்க்கை கதை: வெளியானது 'சபாஷ் மிது' டீசர்

டாப்ஸி
டாப்ஸி

மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலிராஜின் வாழ்க்கை கதையான `சபாஷ் மிது' படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலிராஜ். தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த இவர் ராஜஸ்தானின் பிறந்து வளர்ந்தவர். ஐதராபாத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மகளிர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனையான இவர், தொடர்ச்சியாக பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்.

ஏழு போட்டிகளில் தொடர்ந்து அரை சதம் அடித்தது, நான்கு உலகக் கோப்பை தொடர்களுக்கு கேப்டனாக இருந்தது உட்பட பல்வேறு சாதனைகளை படைத்துள்ள, மிதாலியின் வாழ்க்கை கதை ’சபாஷ் மிது’ என்ற பெயரில் திரைப்படமாகி வருகிறது.

மிதாலி ராஜ் கேரக்டரில் டாப்ஸி நடிக்கிறார். விஜய் ராஸ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். வயகாம் 18 நிறுவனம் தயாரிக்கிறது. ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கியுள்ள இந்தப் படத்தின் ஸ்கிரிப்டை ப்ரியா அவென் எழுதியுள்ளார். ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்யும் இந்தப் படத்துக்கு அமித் திவேதி இசை அமைக்கிறார்.

இந்தப் படத்தின் டீசர் இன்று வெளியானது. இதை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in