விஜய் படத்தில் நடிக்கிறாரா பிரபல ஹீரோ?

விஜய் படத்தில் நடிக்கிறாரா பிரபல ஹீரோ?

விஜய் படத்தில் நடிகர் ஷாம் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

’பீஸ்ட்’ படத்தை அடுத்து விஜய் நடிக்கும் அவருடைய 66-வது படத்தை வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார். இவர் கார்த்தி, நாகார்ஜுனா நடிப்பில் உருவான, ’தோழா’ படத்தை இயக்கியவர். தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். இதில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தமன் இசை அமைக்கிறார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்கி முதல் ஷெட்யூல் நிறைவடைந்தது.

அடுத்த ஷெட்யூல் விரைவில் தொடங்க இருக்கிறது. இந்தப் படத்தில், பிரபல முன்னாள் ஹீரோவும் வெள்ளிவிழா நாயகனுமான மைக் மோகன், விஜய்யின் சகோதரராக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இதுபற்றி படக்குழுவிடம் விசாரித்தபோது, அவர் நடிக்கவில்லை என்று தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் ஷாம், முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. நடிகர் ஷாம், குஷி படத்தில் விஜய்யின் நண்பர்களில் ஒருவராக சிறிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in