'சாகுந்தலம்' ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிவைப்பு: சமந்தா ரசிகர்கள் ஏமாற்றம்

நடிகை சமந்தா நடித்த சாகுந்தலம் திரைப்படம்
நடிகை சமந்தா நடித்த சாகுந்தலம் திரைப்படம்'சாகுந்தலம்' ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிவைப்பு: சமந்தா ரசிகர்கள் ஏமாற்றம்

சமந்தா நடித்துள்ள 'சாகுந்தலம்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதனால் சமந்தாவின் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

நடிகை சமந்தா நடித்த சாகுந்தலம் திரைப்படம்
நடிகை சமந்தா நடித்த சாகுந்தலம் திரைப்படம்'சாகுந்தலம்' ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிவைப்பு: சமந்தா ரசிகர்கள் ஏமாற்றம்

ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள 'சாகுந்தலம்' திரைப்படம் சரித்திர கதையம்சம் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். நடிகை சமந்தா, மலையாள நடிகர் தேவ்மோகன் ஆகியோர் நடித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி பரவலான வரவேற்பைப் பெற்றது. கிராபிக்ஸ் பணிகள் நிறைவடையாத காரணத்தால் பிப்.17-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் 'சாகுந்தலம்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படுவதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. அத்துடன் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதனால் சமந்தாவின் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in