பாலியல் வழக்கில் துபாயில் இருந்து ஜார்ஜியா தப்பிய நடிகர்: போலீஸார் அதிர்ச்சி

பாலியல் வழக்கில் துபாயில் இருந்து ஜார்ஜியா தப்பிய நடிகர்: போலீஸார் அதிர்ச்சி

பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வரும் பிரபல நடிகர் துபாயில் இருந்து ஜார்ஜியாவுக்கு தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.

மலையாள நடிகை ஒருவர், கொச்சி போலீஸில் நடிகரும் தயாரிப்பாளருமான விஜய் பாபு மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். இதுபற்றி போலீஸார் விசாரிக்கத் தொடங்கியதும், விஜய் பாபு துபாய்க்குத் தப்பியோடினார். மே 19-ம் தேதி போலீஸில் ஆஜராவதாக விஜய் பாபு தகவல் தெரிவித்திருந்தார்.

சர்வதேச போலீஸ் உதவியுடன் அவரைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் நேற்று ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஆஜராக வில்லை.

இதனால், கொச்சி காவல்துறை நடிகர் விஜய் பாபுவின் பாஸ் போர்ட்டை ரத்து செய்ய உள்துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை வைத்தது. அதை ஏற்று அவரது பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டது. பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அவர் விசாவும் ரத்தாகும், இதனால் ஐக்கிய அரபு அமீரக போலீஸார் அவரை கைது செய்து இந்தியாவுக்கு அனுப்புவார்கள் என்று கொச்சி போலீஸார் நம்பினர். ஆனால், நடிகர் விஜய் பாபு நேற்றே, துபாயில் இருந்து ஜார்ஜியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இது போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குற்றவாளிகளை நாடு கடத்துவது தொடர்பாக ஜார்ஜியாவுக்கும் இந்தியாவுக்கும் ஒப்பந்தம் ஏதும் இல்லை என்பதால் அவரை கைது செய்வது கஷ்டம் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in