எந்தப் பிரச்சினை வந்தாலும் பெண்கள் அதை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் - நடிகை சாய் ரித்து பேட்டி!

நடிகை சாய் ரித்து
நடிகை சாய் ரித்து

வேகமாக வளர்ந்து வரக்கூடிய டிஜிட்டல் யுகத்தில் வாய்ப்புகளுக்கான பெரும் களமாக மாறி இருக்கின்றன சமூகவலைதளங்கள். குறிப்பாக, அங்கு கிடைக்கும் புகழைப் பயன்படுத்தி நடிப்புத் துறைக்குள் நுழைந்தவர்கள் ஏராளம். அப்படி, சமூகவலைதளப் பக்கத்தில் பிரபல இன்ஃபுளூயன்சராக இருந்து சின்னத்திரை நடிகையாக மாறி இருப்பவர் சாய் ரித்து. 'தங்கமகள்’ சீரியலில் நடித்து வரும் அவரிடம் பேசியதிலிருந்து...

சமூகவலைதளங்களில் பிரபலமாக இருந்து பின்பு நடிக்க வந்தவர்களில் நீங்கள் ஒருவர். இந்த மாற்றத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

சாய் ரித்து
சாய் ரித்து

நானும் இதுபற்றி நிறைய யோசித்திருக்கிறேன். கத்திக்கு இருமுனை போல சமூகவலைதளத்தை நீங்கள் ஜாக்கிரதையாகத் தான் பயன்படுத்த வேண்டும். எனக்கு இதே சமூகவலைதளம் மூலம் வாய்ப்புக் கிடைத்தது நல்ல விஷயம். அதைத்தாண்டி வேறு ஏதேனும் பிரச்சினைகள் வந்திருந்தால் நிச்சயம் ஆபத்துதான். அதனால், குழந்தைகள் இளைஞர்கள் ஆகும்வரை அவர்களை சமூகவலைதளங்களுக்கு அதிகம் பழக்காமல் பெற்றோர் பாதுகாக்க வேண்டும் என்றுதான் சொல்வேன்.

என் அப்பா காலமாகியதும் அவரது அரசு வேலை எனக்கு வந்தது. ஆனால், ஒருகட்டத்தில் எனக்கான சுய அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்று விருப்பப்பட்டுதான் வேலையை விட்டு விட்டு சமூகவலைதளங்களில் ஆக்டிவாக ஆரம்பித்தேன். அந்த வீடியோக்கள் வைரலாக ஆரம்பித்ததும் நடிக்கவும் வாய்ப்பு வந்தது.

அரசு வேலை வேண்டாம் நடிக்கப் போகிறேன் என்று நீங்கள் சொன்ன போது வீட்டில் என்ன ரியாக்‌ஷன் கொடுத்தார்கள்?

சாய் ரித்து
சாய் ரித்து

எப்படி ஒத்துக்கொள்வார்கள்? அடி, உதை விழாத குறைதான்! அப்பா இல்லாத சமயத்தில் அவருடைய வேலை எனக்கு வந்திருக்கிறது. அடுத்த 30, 40 வருடங்களுக்கு என்னுடைய கரியரில் எந்த பிரச்சினையும் இருந்திருக்காது. இதையெல்லாம் விட்டு விட்டு நான் நடிக்கப் போகிறேன் என்றால் எப்படி சம்மதம் சொல்வார்கள். ”உன் இஷ்டத்துக்குத்தான் எல்லாம் பண்ணணுமா?” என அம்மாவும் சொந்தங்களும் திட்டித் தீர்த்து விட்டார்கள்.

இருந்தாலும் ஒருக்கட்டத்தில் அம்மா என்னிடம் வந்து, “நான் உன்னைப் பார்த்துக் கொள்கிறேன். உன் விருப்பம் எதுவோ அதையே செய்” எனச் சொன்னார். ஆரம்பத்தில் சில சினிமா வாய்ப்புகள் வந்தாலும், தினந்தோறும் மக்களுடன் கனெக்ட்டாக இருக்க சீரியல் சரியான சாய்ஸாக இருக்கும் என நினைத்து இங்கு வந்தேன்.

மீடியா துறையில் பல பெண்கள் எதிர்பாராத பல சங்கடங்களை சந்தித்து இருக்கிறார்கள். உங்களுக்கு அப்படி எதாவது நெகட்டிவ் விஷயங்கள் நடந்துள்ளதா?

சாய் ரித்து
சாய் ரித்து

அரசு வேலையை விட்டு வந்துவிட்டோம் என்ற வருத்தம் இருந்தாலும், இப்போது நான் ஒரு மாதத்தில் வாங்கிக் கொண்டிருந்த சம்பளத்தை ஒரே நாளில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறேன். பொருளாதார ரீதியாக இந்த வேலை எனக்கு சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது. இந்தத் துறைக்கு வருவதற்கு முன்பாக, பாலியல் ரீதியான தொல்லைகள், நேரத்தை உறிஞ்சும் உழைப்பு என் பல விஷயங்களைக் கேள்விப்பட்டேன்.

ஆனால், அதிர்ஷ்டவசமாக நான் இதுவரை அதுபோன்ற விஷயங்களை சந்திக்கவில்லை. எந்தப் பிரச்சினை வந்தாலும் பெண்கள் அதை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். அந்தக் கடினமான சூழ்நிலையில் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும் என்பதுதான் நான் சொல்ல விரும்புவது.

நீங்கள் வழக்கமாகப் பின்பற்றும் ஸ்கின் கேர் டிப்ஸ் சொல்லுங்கள்?

சாய் ரித்து
சாய் ரித்து

முதல் விஷயம் அதிக தண்ணீர் குடிப்பதுதான். ஏனெனில், வெயில் காலம் ஆரம்பித்து விட்டது. இளநீர், மோர் என உடலை குளிர்ச்சிப் படுத்தும் விஷயங்களில் கவனமாக இருங்கள். அதேபோல, ஸ்கின் கேர் என்பது அழகுக்காக என நிறைய பேர் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். உடல் ஆரோக்கியம் போல, சரும ஆரோக்கியத்திற்கான அடிப்படைதான் ‘ஸ்கின் கேர்’. இதை சரியாக பின்பற்றினால் உங்களுடைய தோல் அழகாக, ஆரோக்கியமாக இருக்கும்.

இதற்கு சத்தான உணவில் இருந்தே ஆரம்பியுங்கள். தர்பூசணி விதை, சூரியகாந்தி விதை போன்றவற்றை சாப்பிட்டால் தோல் அழகில் நல்ல வித்தியாசம் தெரியும் என்பது என்னுடைய குட்டி டிப்ஸ். இது இல்லாமல், ரெகுலராக ஒரு ஸ்கின் டாக்டரிடம் கன்சல்ட் பண்ணிக்கோங்க.

இதையும் வாசிக்கலாமே...  


ராதிகாவுக்கு எதிராக பாஜக நிர்வாகி வேட்புமனு தாக்கல்... விருதுநகரில் வெடித்தது உட்கட்சி பூசல்!

கலங்கிய அண்ணாமலை... கிணறு வெட்ட பூதம் கிளம்பிடுச்சு... மொத்த ஜோலியையும் முடிக்க மெகா திட்டம்!

நான் பேசும்போது எழுந்து போனால் ரத்தம் கக்கி சாவீர்கள்... செல்லூர் ராஜு லகலக!

திடீரென மயங்கிய அமைச்சர் நேரு... பிரச்சாரம் பாதியிலேயே ரத்து... பதறிய தொண்டர்கள்!

சென்னையில் பரபரப்பு... ரயிலில் பண்டல், பண்டலாக கஞ்சா கடத்தி வந்த பெண் பத்திரிகையாளர் கைது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in