குழந்தைகளைக் கொண்டாடும் நடிகை சினேகா திரைப்படத்திற்கு சியோல் விருது

குழந்தைகளைக் கொண்டாடும் நடிகை சினேகா திரைப்படத்திற்கு சியோல் விருது

தென் கொரியாவின் சியோலில் நடைபெற்ற திரைப்பட விழாவில் நடிகை சினேகா நடித்த ‘ஷாட் பூட் த்ரீ ‘ படத்திற்கு சிறந்தத் திரைப்படத்திற்கான விருது கிடைத்துள்ளது.

நடிகர் பிரசன்னா, நடிகை சினேகா நடித்த ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி அர்ஜுன் நடித்த ‘நிபுணன்’, மோகன்லால் நடித்த ‘பெருச்சாழி’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அருணாச்சலம் வைத்தியநாதன். விஜய் சேதுபதி நடித்த ‘சீதக்காதி’ படத்தின் இணை தயாரிப்பாளர் இவர் தான். தற்போது இவர் குழந்தைகளை மையப்படுத்தி ‘ஷாட் பூட் த்ரீ’ என்ற படத்தை எடுத்துள்ளார்.

நடிகை சினேகா, நடிகர்கள் வெங்கட் பிரபு, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நஇப்படத்தில் மாஸ்டர் பூவையார், பிரபல பாடகி பிரணிதி, நடனக் கலைஞர் கைலாஷ் ஹீத் மற்றும் புதுமுகம் வேதாந்த் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவை சுதர்ஷன் நிவாசன் கையாள, வீணை வித்வான் ராஜேஷ் வைத்யா இசையமைக்கிறார். இந்தப் படத்தை தனது சொந்த நிறுவனமான யூனிவெர்ஸ் கிரியேஷன்ஸ் மூலம் அருணாச்சலம் வைத்தியநாதன் தயாரித்துள்ளார். தற்போது தயாரிப்பு முடிந்த 'ஷாட் பூட் த்ரீ' படத்திற்கு தென் கொரியாவில் உள்ள சியோலில் ஐசிஏஎஃப்எஃப் (ICAFF) திரைப்பட விழாவில் சிறந்த திரைப்பட விருதை வென்றுள்ளது.

இது தென்கொரியாவில் துணை விலங்குகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட முதல் திரைப்பட திருவிழாவாகும். 2016-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தத் திரைப்பட விழாவில், முதன் முறை ஒரு இந்தியத் திரைப்படம் விருதை வென்றுள்ளது. விலங்குகள் செல்லப்பிராணிகள் மட்டுமல்ல, இப்போது குடும்பம் அல்லது வாழ்க்கைத் துணையாகக் கருதப்படுகின்றன. எனவே இந்தத் திரைப்பட விழா செல்லப்பிராணிகள் மேல் நாம் கொண்டுள்ள நட்பையும் அன்பையும் கொண்டாடுகிறது. திரைப்படக்குழுவினர், இயக்குநருக்கு எழுதிய பாராட்டு மடலில் இந்த விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in