செந்தில் ராஜலட்சுமி நீக்கம்; அதிதி ஷங்கருக்கு வாய்ப்பு: சர்ச்சையான `விருமன்' பாடல்

செந்தில் ராஜலட்சுமி நீக்கம்; அதிதி ஷங்கருக்கு வாய்ப்பு: சர்ச்சையான `விருமன்' பாடல்

`விருமன்' படத்தில் மதுரை வீரன் என்ற பாடலை முதலில் செந்தில் ராஜலட்சுமி பாடிய நிலையில், அவரை நீக்கிவிட்டு இயக்குநர் ஷங்கரின் மகளை பாட வைத்துள்ளது படக்குழு. தற்போது இது சர்ச்சையாக மாறியுள்ளது.

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் `விருமன்'. படத்தில் நாயகியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் மதுரையில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அறிமுகமான முதல் படத்திலேயே யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல் ஒன்றை பாடியிருக்கிறார் அதிதி ஷங்கர். மதுரை வீரன் என தொடங்கும் அந்த பாடல் அதிதி ஷங்கர் மற்றும் யுவன் குரலில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இதே நேரத்தில் இந்த பாடல் குறித்து தற்போது சர்ச்சை கிளம்பியுள்ளது. இந்தப் பாடலை முதலில் பாடியது சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் ராஜலட்சுமியாம். திடீரென ராஜலட்சுமியை நீக்கிவிட்டு அதிதி ஷங்கரை பாட வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சர்ச்சை குறித்து படக்குழு எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in