`அதுவும் இதுவும் ஒண்ணா?; தெரியாத விஷயங்கள்ல கருத்துச் சொல்லக் கூடாது’- சாய் பல்லவியை சாடிய சீனியர் நடிகை

`அதுவும் இதுவும் ஒண்ணா?; தெரியாத விஷயங்கள்ல கருத்துச் சொல்லக் கூடாது’- சாய் பல்லவியை சாடிய சீனியர் நடிகை

ராணா, சாய் பல்லவி நடித்துள்ள தெலுங்கு படம், ’விராட பர்வம்’. வேணு உடுலா இயக்கியுள்ள இந்தப் படம் இன்று வெளியாகியுள்ளது. படம் பற்றி யூடியூப் சேனல் ஒன்றுக்கு சில நாட்களுக்கு முன் பேட்டியளித்த நடிகை சாய் பல்லவி ஒரு கேள்விக்கு பரபரப்பு பதிலளித்தார்.

அதில், "காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தில், பண்டிட்டுகள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பதைக் காட்டி இருக்கிறார்கள். இதை மத மோதலாக எடுத்துக்கொண்டால், சமீபத்தில் பசுவை ஏற்றிச் சென்ற இஸ்லாமியரை தாக்கி, ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிடச் சொன்னதை என்னவென்று சொல்வீர்கள்? அதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?" என்று கேள்வி எழுப்பி இருந்தார். இது பரபரப்பானது.

சாய் பல்லவியின் இந்தப் பேச்சுக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்த அகில் என்பவர் நடிகை சாய் பல்லவி மீது ஹைதராபாத் சுல்தான் நகர் போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் நடிகையும் பாஜக தலைவருமான நடிகை விஜயசாந்தி சாய்பல்லவிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

’’ஒரு திருடனை அடிப்பதையும் தவறு செய்ததற்காக, தாய் தன் குழந்தையை அடிப்பதையும் எப்படி ஒன்றாக கருத முடியும்? தெரியாத விஷயங்களை பேசாமல் இருப்பதுதான் சிறந்தது. இன்று நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு நொடியில் கோடிக்கணக்கானவர்களைச் சென்று சேர்கிறது. வார்த்தைகளில் சிறு வித்தியாசம் இருந்தாலும் கேள்விக் கேட்கும் சமூகத்தில் இருக்கிறோம். அதனால், பேசுகிற விஷயங்களில் சமூக பொறுப்புடனும் விரிவான புரிதலுடன் பதிலளிப்பது அவசியம். காஷ்மீர் பைல்ஸ் படத்துடன் தொடர்புபடுத்தி ’விராட பர்வம்’ படத்துக்கு மக்களின் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கிறார்கள் என்று கேள்விப்படுகிறேன்’’ என்று விஜயசாந்தி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in