நீங்கள் இருக்கும் லைவ் லொகேஷனை எனக்கு அனுப்புங்கள்: ‘குந்தவை’ த்ரிஷாவிற்கு நடிகர் கார்த்தி செய்த ட்விட்!

நீங்கள் இருக்கும் லைவ் லொகேஷனை எனக்கு அனுப்புங்கள்: ‘குந்தவை’ த்ரிஷாவிற்கு நடிகர் கார்த்தி செய்த ட்விட்!

எழுத்தாளர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவல் தற்போது திரைப்படமாகி உள்ளது. தமிழ் சினிமாவின் கனவான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குநர் மணிரத்னம் திரைப்படமாக்கி உள்ளார். எம்ஜிஆர், கமல்ஹாசன் என பலரும் முயற்சித்த இப்படத்தை மணிரத்னம் தற்போது நனவாக்கி உள்ளார்.

கார்த்தி, விக்ரம், ‘ஜெயம்’ ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முக்கிய பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாய் உருவாகி உள்ள இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தை லைகா புரொடக்‌ஷனுடன் இணைந்து மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸூம் தயாரித்து இருக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

சென்னையில் நாளை மாலை டீசர் வெளியீட்டு விழா நடக்க இருக்கும் நிலையில் ஆதித்ய கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய் என இவர்களது போஸ்டர்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று குந்தவையா த்ரிஷாவின் போஸ்டர் வெளியானது. இதற்கு தான் படத்தில் வந்தியத்தேவனாக நடித்திருக்கும் கார்த்தி குந்தவையான த்ரிஷாவை வரவேற்று ட்விட் செய்திருக்கிறார்.

த்ரிஷா பகிர்ந்துள்ள அந்த போஸ்டர் ட்விட்டை மறுபகிர்வு செய்து தன்னுடைய ட்விட்டில் கார்த்தி தெரிவித்திருப்பதாவது: இளவரசி வாருங்கள். நீங்கள் இருக்கும் லைவ் லொகேஷனை எனக்கு அனுப்புங்கள். உங்கள் அண்ணனின் ஓலையை நான் கொண்டு சேர்க்க வேண்டும் என ஜாலியாக ட்வீட் செய்துள்ளார். குந்தவையின் அண்ணனான ஆதித்ய கரிகாலன் ஓலையைக் கொண்டு சேர்க்கும் வந்தியத்தேவன் இளவரசிக்கு இப்படி ஒரு ட்விட் செய்திருப்பது ரசிக்கும்படி இருக்கிறது என ரசிகர்கள் கார்த்தியின் இந்த ட்விட்க்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in