`தடுக்கி விழுந்தால் நம்மை யாரும் தூக்கிவிட மாட்டார்கள்'- யாரைச் சொல்கிறார் செல்வராகவன்

`தடுக்கி விழுந்தால் நம்மை யாரும் தூக்கிவிட மாட்டார்கள்'- யாரைச் சொல்கிறார் செல்வராகவன்

``இங்கு தடுக்கி விழுந்தால் நம்மை யாரும் தூக்கி விட மாட்டார்கள்" என்று இயக்குநர் செல்வராகவன் காட்டமாக கூறினார்.

``இங்கு தடுக்கி விழுந்தால் நம்மை யாரும் தூக்கி விட மாட்டார்கள்" என்று இயக்குநர் செல்வராகவன் காட்டமாக கூறினார்.

இயக்குனர் செல்வராகவனும், நடிகை சோனியா அகர்வாலும் திருமணம் நடந்த சில ஆண்டுகளிலேயே விவகாரத்து பெற்று பிரிந்து விட்டனர். ஆனாலும் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருப்பதாகக் கூறி வருகின்றனர். இதனிடையே, இரண்டாம் உலகம் என்ற படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய கீதாஞ்சலியை காதலித்த செல்வராகவன், அவரையை திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தார். அதன்படி 2011-ம் ஆண்டு ஜூலை 3-ம் தேதி செல்வராகவனுக்கும், முன்னாள் அட்வகேட் ஜெனரல் ராமனின் மகள் கீதாஞ்சலிக்கும் திருமணம் நடந்தது. திருமணமானதும் சீக்கிரத்திலேயே ஒரு மகளைப் பெற்றெடுத்தார் கீதாஞ்சலி. அந்தக் குழந்தைக்கு லீலாவதி என்று பெயரிட்டனர். மீண்டும் கர்ப்பவதியானார் கீதாஞ்சலி. அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இதனிடையே, தனது சகோதரர் தனுஷை வைத்து நானே வருவேன் என்ற படத்தை இயக்கினார் செல்வராகவன். அந்தப் படம் வெற்றி பெறவில்லை. இதைத் தொடர்ந்து இயக்குநர் மோகன் இயக்கத்தில் செல்வராகவன் `பகாசூரன்' என்ற இடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், செல்வராகவன் காட்டமாக ட்விட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், "இங்கு தடுக்கி விழுந்தால் நம்மை யாரும் தூக்கி விட மாட்டார்கள். நாம்தான் அழுது புரண்டு, நமக்கு நாமே ஆறுதல் அடைந்து ,எதையாவது பிடித்து கொண்டு, நொண்டி நிமிர்ந்து நிற்க வேண்டும். யாரையாவது எதிர்பார்த்து விழுந்து கிடந்தால் வாழ்க்கை முழுக்க விழுந்து கிடக்க வேண்டியதுதான்" என்று காட்டமாக கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in