“நீட் எல்லாம் தடுக்க முடியாது” - பரபரப்பைக் கிளப்பும் ‘செல்ஃபி’ ட்ரெய்லர்

இயக்குநர் மதிமாறன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ், கௌதம் வாசுதேவ் மேனன், வர்ஷா பொல்லம்மா ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் ‘செல்ஃபி’.

வியாபாரக் கூடங்களாக மாறிப்போன கல்லூரிகளில், திரை மறைவாக நடக்கும் கல்வி வியாபாரத்தை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாகியுள்ளது. பிளஸ் 2 தேர்வில் போதிய மதிப்பெண் பெறாவிட்டாலும், சட்டத்தையும் விதிமுறைகளையும் ஏமாற்றி எப்படி கல்வி விற்கப்படுகிறது என்பதை மையம் கொண்டே இத்திரைப்படத்தின் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ளார். கடலூரில் இருந்து சென்னை வந்து கல்லூரியில் படிக்கும் மாணவன் கதாபாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ளார்.

தற்போது வெளியாகி உள்ள இத்திரைப்படத்தின் ட்ரெய்லரின் இறுதியில் கௌதம் வாசுதேவ் மேனன் பேசுவதாக வரும் “நீட் எல்லாம் தடுக்க முடியாது. அதை வச்சி நாம எப்படிக் காசு பண்ணனும்னு மட்டும்தான் யோசிக்கணும்” என்ற வசனம் சமூக வலைதளத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. தற்போது தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் திமுக அரசாங்கம் நீட் தேர்வைத் தடை செய்துவிடுவோம் என்று பேசி வரும் சூழலில், ஒரு தமிழ்த் திரைப்படத்தில் இப்படி ஒரு வசனம் இடம்பெறுவது சமூக வலைதளத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in