ஆஸ்கர் விருதுக்கான தேர்வு: பல பிரிவுகளில் ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் போட்டி!

’ஆர்ஆர்ஆர்’ படத்தில்
’ஆர்ஆர்ஆர்’ படத்தில்

ஆஸ்கர் விருதுக்கான பொதுப்பிரிவுகளின் நேரடிப் போட்டியில் “ஆர்ஆர்ஆர்” திரைப்படம் பல பிரிவுகளில் களமிறங்கவுள்ளது.

அமெரிக்காவில் வழங்கப்படும் ஆஸ்கர் விருதுகள் உலக அளவில் சிறந்த திரைப்பட விருதுகளாகக் கருதப்படுகிறது. இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுகள் போட்டியில் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கான பிரிவில் இந்தியா சார்பாக குஜராத்தி படமான 'செல்லோ ஷோ' தேர்வு செய்து அனுப்பப்பட்டுள்ளது.

இந்த பிரிவில் தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண் மற்றும் பலர் நடித்த 'ஆர்ஆர்ஆர்' படம் தேர்வாகாதது படக்குழுவினருக்கு ஏமாற்றத்தை அளித்தது.

ஆனாலும் விருதுக்கான பொதுப் பிரிவுகளிலும் வெளிநாட்டுப் படங்கள் நேரடியாக கலந்து கொள்ள முடியும். அந்த விதத்தில் தற்போது சில பிரிவுகளில் 'ஆர்ஆர்ஆர்' படம் கலந்து கொள்கிறது. “சிறந்த மோஷன் திரைப்படம், சிறந்த இயக்கம், சிறந்த நடிகர்கள், சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒரிஜினல் திரைக்கதை, சிறந்த ஒரிஜினல் பாடல், சிறந்த ஒரிஜினல் இசை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒலி, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த ஆடை அலங்காரம், சிறந்த மேக்கப் மற்றும் ஹேர்ஸ்டைல், சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் ஆகிய பிரிவுகளில் இப்படம் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in