அரசியல் கதையில் நடிக்கிறாரா தனுஷ்?

அரசியல் கதையில் நடிக்கிறாரா தனுஷ்?

அரசியல் படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ், இந்தியில் கவனம் செலுத்தி வரும் நடிகர் தனுஷ், இப்போது தெலுங்கிலும் நடித்து வருகிறார். அவர் நடிக்கும் ’வாத்தி’ படம் தமிழ், தெலுங்கில் உருவாகி வருகிறது. தெலுங்கில் இந்தப் படத்துக்கு ’சார்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்நிலையில், பிரபல தெலுங்கு இயக்குநர் சேகர் காமுலா படத்திலும் தனுஷ் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் கதை அரசியலை மையப்படுத்தியதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தனுஷ், சேகர் காமுலா
தனுஷ், சேகர் காமுலா

இயக்குநர் சேகர் காமுலா, தெலுங்கில் ’லீடர்’ என்ற அரசியல் கதை கொண்ட படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படம் மூலம்தான் நடிகர் ராணா, சினிமாவில் அறிமுகமானார். வசூல் ரீதியாக பெரிய வரவேற்பை இந்தப் படம் பெறவில்லை.

இந்நிலையில் அரசியல் கதைக் கொண்ட ’லீடர்’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருப்பதாக, சேகர் காமுலா கூறியிருந்தார்.

இப்போது அவர் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கும் படம், லீடர் படத்தின் அடுத்த பாகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், அரசியல் கதையில் நடிக்க தனுஷ் ஒப்புக்கொள்வாரா என்பது தெரியவில்லை. முன்னதாக, தனுஷ் நடிக்கும் கதை த்ரில்லராக இருக்கலாம் என்று இயக்குநர் சேகர் காமுலா கூறியிருந்தார்.

நடிகர் தனுஷ், ’கொடி’ படத்தில் அரசியல்வாதியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in