`பாட்ஷா மாதிரி சேகர்பாபுவுக்கு இன்னொரு முகம் இருக்கு’- நடிகர் ரஜினிகாந்த் கலகல

 நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த்’பாட்ஷா மாதிரி சேகர்பாபுவுக்கு இன்னொரு முகம் இருக்கு’- நடிகர் ரஜினிகாந்த் கலகல

’’அமைச்சர் சேகர்பாவுக்கு இன்னொரு முகம் இருக்கிறது அது பாட்ஷா மாதிரி’’ என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

’எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ வரலாற்று புகைப்பட கண்காட்சியை நடிகர் ரஜினிகாந்த் நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’அமைச்சர் சேகர் பாபு மிகவும் விசுவாசமானவர். அவருக்கு இன்னொரு முகம் இருக்கு பாட்ஷா மாதிரி. முதலமைச்சர் ஸ்டாலினின் 54 ஆண்டுகள் அரசியல் பயணம். கட்சியில் படிப்படியாக முன்னேறி வந்துள்ளார்.

இப்போது அவர் முதலமைச்சராக இருக்கிறார் என்றால் அது மக்கள் அவர் உழைப்புக்கு கொடுத்த அங்கீகாரம். அவருக்கு நீண்ட ஆயுளை ஆண்டவன் கொடுக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in