தஞ்சையில் உள்ள ஜி.வி திரையரங்க வளாகம் பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி!

தஞ்சையில் உள்ள ஜி.வி திரையரங்க வளாகம் பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி!

தஞ்சாவூரில் உள்ள ஜி.வி.பிலிம்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான திரையரங்க வளாகத்தை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது

இயக்குநர் மணிரத்னத்தின் சகோதரர் ஜி.வெங்கடேஸ்வரன், இவர் ஜி.வி.பிலிம்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி பல்வேறு படங்களை தயாரித்தார். 2003ம் ஆண்டில் அவர் தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில் பிரிட்டனை சேர்ந்த ஒரு நிறுவனம் போர்ச்சுகல் வங்கியில் கடன் பெற்று ஜி.வி.பிலிம்ஸின் பங்குகளை ரூ.172.8 கோடிக்கு வாங்கியது. வெளிநாட்டில் பங்குகளை விற்பதற்கு ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனம், அந்நிய செலாவணி மேலாண்மை சட்ட விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்பதாக புகார் எழுந்தது.

இந்த வழக்கில் முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டதால், தஞ்சாவூரில் உள்ள ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.8.94 கோடி மதிப்புள்ள திரையரங்க வளாகத்தை தற்போது அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in