பெண்களைப் பார்த்தாலே மிகவும் பயமாக இருக்கும்: சொல்கிறார் பிரபல ஹீரோ

பெண்களைப் பார்த்தாலே மிகவும் பயமாக இருக்கும்: சொல்கிறார் பிரபல ஹீரோ

பெண்களைப் பார்த்தாலே மிகவும் பயமாக இருக்கும் என்று நடிகர் விஜய் தேவரகொண்டா கூறியுள்ளார்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோவாக திகழ்பவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. 'டியர் காம்ரேட்', 'கீதாகோவிந்தம்', 'நோட்டா' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

'அர்ஜுன் ரெட்டி' படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். இவர் தற்போது பூரி ஜெகநாத் இயக்கத்தில் 'லைகர்' படத்தில் நடித்துள்ளார். அவர் நடித்த முதல் பான் இந்தியா திரைப்படம் இது. இப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் நடிகர் விஜய் தேவரகொண்டா சமீபத்திய ஒரு பேட்டியில் தனக்கு பெண்களைப் பார்த்தாலே பயம் என்று கூறியுள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறுகையில், “எனக்கு 18 வயது வரை பெண்களைப் பார்த்தாலே பயம் தான். ஆண்கள் பள்ளியில் படித்ததால் பெண்களைப் பார்த்தாலே மிகவும் பயமாக இருக்கும்.பெண்களை வேற்று கிரகவாசிகள் போல பார்த்தேன். 18 வயது வரை பெண்களின் கண்களைப் பார்த்து பேசத் தெரியாது" என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in